• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

குப்பைகளை கொட்ட வந்த லாரியை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..,

ByP.Thangapandi

Sep 15, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேக்கிழார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட எஸ். புதுப்பட்டி கிராமத்தில் உள்ள மயானத்தில் உசிலம்பட்டி போக்குவரத்து பணிமனை பகுதிகளிருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகளை டிப்பர் லாரியில் கொட்ட வந்த லாரியை கிராம மக்கள் சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாகவும், துர்நாற்றம் வீசி, எரிக்கப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தகவல் அறிந்து விரைந்து உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் லாரியை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் ஈடுபட்டதையடுத்து

தொடர்ந்து லாரியை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்வதாகவும் கொட்டப்பட்ட குப்பைகளை இரு தினங்களுக்குள் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்ததையடுத்து லாரியை விடுவித்தனர்.,

இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.