மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கோவில் வரும் 17ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது இதற்காக சித்திரை வீதிகள் முழுவதும் அடைக்கப்பட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது மேலும் காவல்துறையினர் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக திருப்பணிக்காக புது மண்டபத்தில் காவல் கட்டுப்பாட்டு வரை சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் மற்றும் நான்கு சித்திரை வீதிகள் 470 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

புதுமண்டபத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா அறையில் சுமார் 277 கேமராக்கள் இருந்து அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது
இதில் 77 கேமராக்கள் frc எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா மூலம் பழைய குற்றவாளிகள் முக அமைப்புகளை உடனுக்குடன் ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடிக்க உதவும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
மேலும் 7 அதி நவீன பிடி இசட் எனப்படும் PTz அதிநவீன கண்காணிப்பு கேமரா 360 டிகிரி சுழலும் வகையில்அமைக்கப்பட்டு கோவில் கோபுரங்கள் முதல் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ளது மூன்று கிலோமீட்டர் சுற்றளவிற்கு துல்லியமாக தெரியும் இந்த அதிநவீன கேமராவினால் கண்காணிப்பு பள்ளியில் ஈடுபடும் காவலர்களுக்கு வசதியாக இருக்கும்
மேலும் கோவிலில் உள்புறம் 180 கேமரா மூலம் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது








