• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

டாட்டா ஏசி வாகனம் இருசக்கர வாகனத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு..,

ByP.Thangapandi

Sep 12, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடுகபட்டி யைச் சேர்ந்தவர் அந்தோணி முத்து., இவர் தி.விலக்கு அருகில் உள்ள தனது மருமகன் வீட்டிற்கு சென்றுள்ளார்., அவ்வழியாக திருமங்கலத்திலிருந்து உசிலம்பட்டி நோக்கி எதிரே வந்த டாட்டா ஏசி வாகனம் இருசக்கர வாகனத்தில் மோதியதில் அந்தோணி முத்து சம்பவ இடத்தில் படுகாயம் அடைந்தார்.,

தகவல் அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் போலீசார் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் மருத்துவமனைக்கு வந்தவுடன் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.,

மேலும் உசிலம்பட்டி நகர் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.,