2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆசிரியர் விருது பெற்ற திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த 13 ஆசிரியர்களான பொன்னேரி வட்டம் காட்டூர் அரசு ஆதி திராவிட நல தொடக்கப்பள்ளி, இடைநிலை ஆசிரியர் தி. இளங்கோவன், பூந்தமல்லி வட்டம் காட்டுப்பாக்கம் அரசு ஆதி திராவிட நல தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை ஆசிரியர் ல. காந்திமதி , திருத்தணி வட்டம் மைலார்வாடா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கே.பாபு, ஆவடி நகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆங்கில பட்டதாரி ஆசிரியை ச. மஞ்சு பார்கவி, ஆவடி காமராசர் அரசி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ச. சாய்பிரகாஷ், பொன்னேரி வட்டம் கல்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் த. விஜயலட்சுமி, பூந்தமல்லி ஒன்றியம் வயலாநல்லூர் இடைநிலை ஆசிரியர் க. முருகேஸ்வரி, திருத்தணி வட்டம் பெரியகடம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் த. ஜெ. கோகுல்ராஜ், திருத்தணி வட்டம் டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் சு. லீலா மனோகரன், திருத்தணி வட்டம் பூனிமாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வே. முருகன், பூந்தமல்லி செம்பரம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் க. ரவிச்சந்திரன், ஆவடி காமராஜர்நகர் ஆர.சி.எம் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி முதிகலை ஆசிரியர் சுவாமிநாதன் , ஆவடி நபி கிரசென்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் கா. கு.அப்சர் உசேன் ஆகியோரை திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கவிதா அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டி வாழ்த்தினார் பின்பு திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.அறிவழகன் அவர்களுக்கு விருது பெற்ற ஆசிரியர்கள் சார்பில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் சா.அருணன் நன்றி தெரிவித்து பொன்னாடை அணிவித்தார்.

நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்டக் கல்வி அலுவலர் அமுதா , திருவள்ளூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் நிர்மல் குமார் , பொன்னேரி மாவட்டக் கல்வி அலுவலர் ( பொ) ஐயப்பன், பொன்னேரி தொடக்கக்கல்வி மாவட்ட அலுவலர் ( பொ) பன்னீர்செல்வம் , தனியார் பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலர லிங்கேஷ்வரன், பள்ளிக்கல்வித்துறை மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் பவானி , மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் Monster உதவியாளர்கள் தண்டபாணி , தியாகு , பள்ளிகளின் துணை ஆய்வாளர் குமரவேலன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.








