கடந்த 9.9.26 அன்று கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனம் காணாமல் போய்விட்டது என்று புகார்தாரர் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார்.

அது தொடர்பாக காட்டூர் காவல் நிலையம் காவல் ஆய்வாளர் திரு ரவி தலைமையில் திரு தனசேகர் உதவி ஆய்வாளர் தனது காவல் படையுடன் பல்வேறு இடங்களில் தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். தொடர்ந்து தேடுதல் வேட்டையில் இருந்த காவல்துறையினருக்கு கோவை ஜிபி சிக்னல் அருகில் இருசக்கர வாகனத்தை சோதனை செய்யும் போது பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ( 29), தந்தையார் பெயர் பார்த்திபன் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது 9.9.26 அன்று காணாமல் போன இருசக்கரத்தை வாகனம் அடையாளம் காணப்பட்டு குற்றவாளியை 32 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பிடித்தனர். நீண்ட நேர விசாரணையில் குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பின்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.









