• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விக்டோரியா ஹாலில் மேயர் ரங்கநாயகி தலைமையில் மாமன்ற கூட்டம்..,

BySeenu

Sep 11, 2026

கோவை டவுன் ஹால் பகுதியில் உள்ள விக்டோரியா ஹாலில் மேயர் ரங்கநாயகி தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது

கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பாக அதிமுக மாமன்ற உறுப்பினர் குழு தலைவர் பிரபாகரன் தலைமையில் ஆர்பாட்டம். நடைபெற்றது

வெள்ளலூர் குப்பை கிடங்கில் 450 கோடி செலவில் 20 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க கோவை மாநகராட்சியின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கண்டன ஆர்பாட்டம். செய்து வருகின்றனர்

மேலும் சூயஸ் குடிண்ணீர் வினியோகத்தில் பலகோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு.

அதே போல தெருநாய்களை கட்டுபடுத்த தவறிய மாநகராட்சியை கண்டித்தும் இந்த ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது.

மேயர் இருக்கை முன்பாக அதிமுக கவுன்சிலர் பிரபாகரன்

தமிழக அரசு மின்சாரம் தயார் செய்வதை கண்டித்து கைவிட வேண்டும் என அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் கூறியதால் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது

மேலும் தமிழக அரசு சிறப்பு மாநகராட்சி கோவா என அறிவித்துள்ளது

அதனை கோவை அதிகாரிகள் அவர்களுக்கு கொடுக்கப்படாமல் இருந்ததற்காக மாநகராட்சி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது