• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மனைவி தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய குடிகார கணவன் கைது..,

ByKalamegam Viswanathan

Sep 11, 2026

திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள கருவாட்டு பாறை சேர்ந்தவர் லெட்சுமணன் மகன் கோபிநாத் (வயது 23 ) ஹார்விப்பட்டி எதிரே உள்ள தேவிநகர் பகுதியை முருகேசன் மகள் விஜயலட்சுமி (வயது 21) இருவரும் காதலித்து வந்தனர் .

வீட்டிற்கு தெரியமால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் அதன் பின்பு இருவரும் கோபிநாத் தாய் தந்தை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் விஜயலட்சுமி கர்ப்பமான சூழ்நிலையில் விஜயலட்சுமி மற்றும் கோபிநாத் குடும்பத்தினரும் ஒன்று சேர்ந்தனர்.

இந்நிலையில் கோபிநாத் அடிக்கடி குடித்துவிட்டு வந்து விஜயலெட்சுமியிடம் தகராறு செய்வது வழக்கம்.

தனி குடித்தனமாக செல்வதாக கூறி இருவரும் தேவி நகர் செக்கடியில் உள்ள 40 நாட்களுக்கு முன்பாக வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

கடந்த ஏழாம் தேதி நள்ளிரவில் 12.00 மணியளவில் கோபிநாத் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவி விஜயலெட்சுமிடம் தகராறு செய்துள்ளார்.

அப்போது கோபிநாத் குடிபோதையில் திடீரென விஜயலட்சுமியை தனது கையால் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தூக்கு போட்டு இறந்ததாக அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்து நாடகமாடியுள்ளார் .

மேலும் விஜயலெட்சுமி அக்காவிடம் உங்கள் தங்கச்சி தூக்குபோட்டு இறந்துவிட்டது. என்று போன் மூலமாக தெரிவித்துள்ளார்.

விஜயலட்சுமி அக்கா வந்து ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தால் 108 ஆம்புலன்ஸ் வந்து பரிசோதித்த பின்பு அரசு ஆம்புலன்ஸி ஏற்ற மறுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பெயரில் திருநகர் போலீசார் அங்கு செல்லுவதற்குள் அக்கம் பக்கத்தினர் தனியார் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்

அங்கு மருத்துவர் பரிசோதனை செய்து போது ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து திருநகர் எஸ்ஐ சபிதா பானு மற்றும் போலீசார் கணவர் கோபிநாதியிடம் தீவிரமாக விசாரித்த போது தான் கழுத்தை நெறித்து கொன்றதை ஒப்புக்கொண்டார்.

திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகி உள்ளதால் ஆர்டிஓ விசாரணைக்கு திருப்பரங்குன்றம் உதவி ஆணையர் சசி பிரியா பரிந்துரை செய்துள்ளனர்.

மேலும் விஜயலட்சுமி குடும்பத்தினர் தனது மகள் இறந்தது குறித்து சந்தேகம் மரணம் என புகார் செய்துள்ளனர். அதன் பேரில் திருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கோபிநாத்தை கைது செய்தனர்.

காதலித்து திருமணம் செய்த மனைவியை தானே கொன்றுவிட்டு தற்கொலை நாடகம் ஆடிய கணவர் செய்கையால் ஆர் வி பட்டி பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது