• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இறப்பிலும் இணைபிரியாத தம்பதியினர்..,

ByKalamegam Viswanathan

Sep 9, 2026

மன்னர் கல்லூரி கெளரவ தலைவர் மற்றும் அவரது மனைவி ஒரே நாளில் இயறகை எய்தினர்.

மதுரை காந்தி நகரை சேர்ந்த பா. சுப்பையா நாயுடுவின் மகனும் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் முன்னாள் தலைவரும், தற்போதைய கல்லூரியின் கௌரவ தலைவரும், தமிழ்நாடு நாயுடு சேம்பர் of காமர்ஸுன் சேர்மனுமான எஸ். ராஜகோபால் அவரது மனைவி ஆர்.வனிதா காலை 8.30 மணிக்கு மரணமடைந்தார்.

இந்த நிலையில் ராஜகோபால் அதே நாளில் மாலை 5.30 மணிக்கு மரணமடைந்தார். இவர்களது பூத உடல் இறுதி அஞ்சலிக்காக மதுரை காந்திநகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு இன்று 9 ம் தேதி மதியம் நல்லடக்கம் செய்யப்படும் என அவர்களது குடும்பத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.