• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வர முடியாமல் பாதிப்பு..,

ByP.Thangapandi

Sep 9, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட உசிலம்பட்டி-பேரையூர் சொல்லும் சாலையில் உள்ள 17 வது வார்டு சங்கரமூர்த்தியார் பிள்ளை தெருவில் பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.,

இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சென்று வர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இப்பகுதியில் அஞ்சல் நிலையம், கூட்டுறவு வங்கி, தனியார் வங்கி மற்றும் பலசரக்கு கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளும் செயல்பட்டு வருகிறது.,

இதனால் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்றுவர முடியாமல் அவதியுற்று வருவதாக கூறப்படுகிறது., மேலும் இரவு நேரங்களில் பாலத்தில் உடைப்பு ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்து காயங்கள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.,

இதுகுறித்து உசிலம்பட்டி நகராட்சி அலுவலத்தில் அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அசம்பாவிதம் ஏற்படும் முன் கழிவு நீர் செல்லும் பாலத்தை அகற்றி புதிய பாலம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.,