• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கீழடியில் மரக்கன்றுகள் நட்ட வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை..,

ByKalamegam Viswanathan

Sep 7, 2026

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் கீழடி தொல்லியல் அகழாய்வு நிறைவைடைந்த பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் மரக்கன்றுகளை வழங்கினார். 2600 ஆண்டுகள் பழமையான தமிழ் எழுத்துக்கள், மற்றும் தமிழர்களின் வாழ்க்கை முறை சான்றுகள் கிடைத்த இடத்தில் மரக்கன்றுகள் நடுவது மகிழ்ச்சி என்றார்.

கீழடியில் அகழாய்வுக்கு நிலம் நன்கொடை வழங்கியவர்களில் ஒருவரான முனைவர் கரு.முருகேசன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இயற்கை ஆர்வலர்கள் ரமேஷ்குமார், எம்மால் இயன்றது அமைப்பின் கண்ணன், தருன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.