• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

போடிநாயக்கன்பட்டியில்கிருஷ்ண ஜெயந்தி சுவாமி வீதி உலா..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டியில்கோபாலகிருஷ்ணன் கோவிலில் 32வது கிருஷ்ண ஜெயந்தி விழா 4 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் காலை 5.30 மணிக்கு முகூர்த்தக்கால் ஊண்டி காப்பு கட்டப்பட்டது.

இரவு 6மணிக்கு சுவாமி ஊஞ்சலாட்டம் நடந்தது.இரண்டாம் நாள் காலை 6 மணிக்கு கோபாலகிருஷ்ணனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. 9 மணிக்கு புஷ்ப அலங்காரமும் 11 மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து முளைப்பாரி ஊர்வலம் கோயிலில் வந்து அடைந்தது.மூன்றாம் நாள் காலை 7:00 மணிக்கு கோபாலகிருஷ்ணனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

மாலை 5 மணிக்கு கருடாழ்வார் வாகனத்தில் கோபாலகிருஷ்ணன் எழுந்தருளிவீதி உலா நடந்தது.இந்த ஊர்வலம் போடிநாயக்கன்பட்டி, ராமநாயக்கன்பட்டி, நீரேத்தான், தாதம்பட்டி கிராமங்களில் முக்கிய வீதிகள் வழியாகசென்று வந்தது.

நான்காம் நாள் காலை 9 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் சென்று காப்பு கழட்ட பட்டது.இது ஏற்பாடுகளை கோபாலகிருஷ்ணன் திருக்கோயில் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.