தமிழக பட்ஜெட்டிலும் மானிய கோரிக்கையிலும் மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகையை உயர்த்தாத தமிழக அரசை கண்டித்து
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் முத்திரைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற சூழலில்

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் தமிழக பட்ஜெட்டிலும் மானிய கோரிக்கையிலும் மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகையை உயர்த்தாத தமிழக அரசை கண்டித்தும்,

மற்ற மாநிலங்களைப் போல உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரியும், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ 10,000 வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டச் செயலாளர் முருகன் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.,
இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை உசிலம்பட்டி நகர் போலீசார் கைது செய்து தனியா திருமணம் என்று சேர்த்து அழைத்து சென்றனர்.

இதில் உசிலம்பட்டி, டி. கல்லுப்பட்டி, சேடப்பட்டி உள்ளிட்ட ஒன்றியங்களிருந்து மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.,








