மதுரை மாவட்டம் சோழவந்தான் பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயம் சார்பாக சந்திரன் பேலஸ் மஹாலில் மும்மதத்தினர் கலந்து கொண்ட ரகஷா பந்தன் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் மதுரை துணை மண்டலம் மூத்த ராஜயோக ஆசிரியை பிரம்மா குமாரிகள் சிவரஞ்சனி உலக மாற்றத்திற்கான இறைஞானம் பற்றி பேசினார். இதில் நைனார் தொழுகை பள்ளிவாசல் முஸ்லிம் ஜமாத் செயலாளர் முகமது உசேன், வள்ளலார் வழியில் ராமு கருப்புசாமி, சி.எஸ், ஐ. தேவாலயம் அருட் திரு ராபின்சன் செல்வகுமார் ஆகிய மும்மதத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினர்.
இதைத் தொடர்ந்து இவர்களுக்கு ராக்கி கயிறு கட்டப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சி மன்ற சேர்மன் எம்.கே. முருகேசன், முன்னாள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஷ்ணு பிரசாத், முன்னாள் தலைமை ஆசிரியர் ஜெய் ஸ்ரீ உள்பட பிரம்மா குமாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக வரவேற்பு கலை நிகழ்ச்சி நடைபெற்று குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.








