புதுக்கோட்டை, டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை (ENT) இலவச சிறப்பு பரிசோதனை முகாமில் டீம் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் K H சலீம் அவர்கள் மருத்துவ முகாமில் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்றார்.

இம்முகாமில் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் A பிரியன் அவர்கள் கலந்துகொண்ட ஏராளமான பொதுமக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கினார்.

தைராய்டு அறுவை சிகிச்சை, தொண்டை வலி, தொண்டையில் சதை வளர்தல், காதுகேளாமை, மூக்கடைப்பு, சைனஸ், காதுவலி, புற்றுநோய் கண்டறிதல், தொடர் தலைவலி, குறட்டை உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு எண்டோஸ்கோபி/ மைக்ரோஸ்கோபி மூலம் சிறப்பு சிகிச்சை ஆலோசனை வழங்கப்பட்டது. முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இம்முகாமில் குடல் மற்றும் இரைப்பை சிறப்பு மருத்துவர் வெங்கட்ராமன், வாய் மற்றும் முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர் சுதன்ராஜ், இருக்கை மருத்துவர் முகமது கனி ,செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர். மருத்துவமுகாமின் ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு மேலாளர் ஷேக் அப்துல் செய்திருந்தார். முகாமின் இறுதியில் வரவேற்புபிரிவு மேலாளர் சந்திரமுரளி நன்றியுரை வழங்கினார்.









