பள்ளிக்கல்வித்துறை நடத்திய BDS & RDS குறுவட்டாரம், மாவட்டம், மாநில தேக்வாண்டோ போட்டிகளில் புத்தாஸ் வீர கலைகளை சார்ந்த வீரர்கள் பல்வேறு பதக்கங்கள் பெற்று வெற்றி பெற்றனர். இவர்களை நேரில் அழைத்து மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் J.பர்வேஸ் அவர்கள் பாராட்டி வாழ்த்து கூறினார்,

உடன் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத்தின் தலைவர் S.அப்துல் ரகுமான் என்ற சேட், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் கண.மோகன்ராஜா , டாக்டர் பேராசிரியர் S.சரவணன், புதுகை வெற்றி ரோட்டரி சங்கத் தலைவர் A.சோமசுந்தரம், செயலாளர் SM. அண்ணாமலை மற்றும் புத்தாஸ் வீர கலைகள் தலைவர் மாஸ்டர் சேது கார்த்திகேயன் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் வந்திருந்தனர்.
இதில் வீராங்கனை செல்வி சபர்ணா மாநில அளவில் இரண்டாமிடம் பெற்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திருந்தார்.









