மதுரை யா.ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த தணிக்காச்சலம், கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜபாளையம் பேருந்து நிலையத்தில் சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தை அறிந்த தவெக மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கார்த்திகேயன், தணிக்காச்சலத்தின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, குடும்ப உறுப்பினருக்கு அரசு வேலை வழங்க ஏற்பாடுகள் செய்வதாக தெரிவித்தார்.
மேலும், உயிரிழந்த தணிக்காச்சலத்தின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த கார்த்திகேயன், குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள் குறித்து கேட்டறிந்தார்.








