விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள ஒத்தையால் கிராமத்தில் மல்லாங்கிணறு பகுதியைச் சேர்ந்த ஜெயசக்தி மற்றும் செல்வமாரி என்பவர்களுக்கு சொந்தமான சின்னத்தம்பி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது

மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) உரிமம் பெற்று செயல்பட்டு வரும் இந்த பட்டாசு ஆலையில் ஐந்துக்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் சிறிய ரக வெடிகள் தயார்செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை பட்டாசு தயாரிக்கும் பணிக்காக மருந்து கலவை தயார் செய்வதற்காக மீனம்பட்டியைச் சேர்ந்த மாடசாமி உட்பட சிலர் கலவை தயார் செய்ததாக தெரிய வருகிறது
அப்போது கலைவையின் போது உறாய்வினால் திடீர் வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது உடனடியாக சுதாரித்த சிலர் அதிலிருந்து தப்பித்து ஓடி இருந்தனர்.

தகவல் அறிந்த சாத்தூர் மற்றும் வெம்பகோட்டை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மருந்து கலவையில் ஈடுபட்ட ஒருவரை காணவில்லை என்று உடனிருந்தவர்கள் தீவிரமாக தேடி வந்தனர்.
தொடர்ந்து வெடித்து சிதறுவதால் மீட்பு பணியிலும் தேடும் பணியிலும் தொய்வு ஏற்பட்டது. இந்த வெடி விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர்.
ஏற்கனவே பட்டாசு வெடிவிபத்து நடந்த கட்டிட இடுப்பாடுகளில் ஒருவரின் உடல் மீட்டெடுக்கப்பட்டது.
மீனம்பட்டி சேர்ந்த ராமர் என்பவரது மகன் மாடசாமி என்பதும் இவர் இந்த ஆலயம் இன்று மருந்து கலவை செய்வதற்காக வந்தவர் என்றும் பின்னர் விசாரணையில் தெரிய வந்தது.

ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் உடலை கைப்பற்றிய சாத்தூர் தாலுகா போலீஸார் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விஏஓ சண்முகராஜ் புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் காவல்துறை கண்காணிப்பாளர் குருசாமி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் என பல நேரில் ஆய்வு மேற்கொண்டனர்








