• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சூராயி அம்மன் கருப்பணசாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா..,

ByKalamegam Viswanathan

Sep 2, 2026

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் குலசேகரன்கோட்டை கிராமத்திற்கு உட்பட்ட எஸ் பெருமாபட்டியில் அமைந்திருக்கும் அருள்மிகு சூராயி அம்மன் கருப்பணசாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காலை ஐந்து முப்பது மணி முதல் விக்னேஸ்வர பூஜையுடன் முதலாம் கால யாக சாலை பூஜைகள் தொடங்கியது தொடர்ந்து பூர்ணாஹீதியுடன் நிறைவு பெற்ற முதலாம் காலயாக பூஜையில் அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜை மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து தீர்த்த குடங்களுடன் அர்ச்சகர்கள் விமான கலசங்களுக்கு சென்றனர் அப்போது கருடன் வானத்தில் வட்டமிட்டது தொடர்ந்து கோபுரகலசங்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த ஸ்ரீராம்சர்மா தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் கும்பாபிஷேக ஏற்பாடுகளை நாட்டாமைக்காரர் வகையறா பங்காளிகள் பெண்ணடி வாரிசுகள் மணியார் காவல்காரர் தேங்கில் பட்டி வகையறா மற்றும் எஸ்.பெருமாள் பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து சூராயி அம்மன் கருப்பணசாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று பூஜைகள் நடைபெற்றது தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. எஸ் பெருமாபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு அம்மனின் அருள் பெற்று சென்றனர்.