• Sat. Aug 29th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘திறன் 1.0 ஹேக்கத்தான் போட்டி..,

BySeenu

Aug 29, 2026

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் புதுமைச் சிந்தனை, தொழில்நுட்பத் திறன் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் கல்லூரி சார்பில் உள்நாட்டு ஹேக்கத்தான் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக திறன் 1.0 ஹேக்கத்தான் போட்டி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது…

குறிப்பாக 36 மணி நேர தொடர் ஹேக்கத்தானாக நடைபெற்ற இதல்,. வழக்கமான வகுப்பறைச் சூழலைத் தாண்டி, மாணவர்கள் தொடர்ந்து 36 மணி நேரம் தங்கள் குழுவினருடன் இணைந்து சிந்தித்து, திட்டமிட்டு, செயல்படுத்தி, சோதனை செய்து, தங்களது தீர்வுகளை முன்வைக்கும் வாய்ப்பைப் பெற்றனர்.

ஹேக்கத்தானில் கணினி சார்ந்த படிப்புகளைப் பயிலும் மாணவர்களுடன், தகவல் தொழில்நுட்பம் சாராத பிற துறைகளைச் சேர்ந்த மாணவர்களும் இணைந்து பங்கேற்றனர். தலா 6 மாணவர்கள் கொண்ட குழுக்களாகப் பிரிந்து, வழங்கப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பல்வேறு புதுமையான யோசனைகளை மாணவர்கள் முன்வைத்தனர்.

இறுதியாக மாணவர்கள் உருவாக்கிய தீர்வுகளை தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழுவினர் மதிப்பீடு செய்து சிறந்த புதுமையான தீர்வுகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள்,மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன..

பரிசளிப்பு விழாவில்,இந்துஸ்தான் குழும நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலாளர் மற்றும் நிர்வாக அறங்காவலர் டாக்டர் பிரியா ., கல்லூரி முதல்வர் மற்றும் நிகழ்ச்சியின் தலைவரான டாக்டர் பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்…

நிகழ்ச்சியை தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் டாக்டர் சரவணன்,. துறையின் இணைப் பேராசிரியர்களான டாக்டர் கௌரி மற்றும் டாக்டர் சிவபிரிந்தா உட்பட , பல்வேறு துறைகளின் தலைவர்கள்,பேராசிரியர்கள் ஒருங்கிணைந்து இணைந்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர்.