• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

போலி பி.சி.ஆர். வழக்கை கண்டித்து விசிகவினருக்கு இந்துமக்கள்கட்சி கண்டனம்…,

ByKalamegam Viswanathan

Aug 28, 2026

இன்று (28-08-26) மதுரை ரிங்ரோடு பாண்டி முனிஸ்வரர் திருக்கோயில் எஸ்.டி.மண்பத்தில் அனைத்து கள்ளர் கூட்டமைப்பின் சார்பாக போலி பி.சி.ஆர் வழக்குகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியாக நடைபெற்று கொண்டிருக்கின்ற அனைத்து BC MBC DNT DNC சமுதாய பிரதிநிதிகள் கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு எதிராக விடுதலை சிறுத்தை கட்சியினர் ரிங்ரோட்டில் சாலை மறியல் செய்துள்ளதை இந்துமக்கள்கட்சி வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது.

தமிழகத்தில் பல வருடங்களாக அனைத்து சமுகத்தை மிரட்டல் விடுக்கும் வகையில் விசிகவினரால் போலி பிசிஆர் வழக்கு பதிவு செய்யப்பட்டு அனைத்து சமுதாய மக்களும் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த போலி பிசிஆர் வழக்கை குண்டர்களை வைத்து கட்சி நடத்தும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தொண்டர்களை தூண்டிவிட்டு குளிர்காய்ந்து வருகிறார்.

இதனால் போலி பிசிஆர் வழக்கில் அனைத்து சாதியினரும் பாதிப்பு அடைந்துள்ளார்கள். அதனால் தான் பிசிஆர் சட்டத்தை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு எதிராக பாண்டி கோயில் மண்டபத்தில் அனைத்து சமுதாய தலைவர்களும் சேர்ந்து கூட்டம் நடத்தப்பட்டது.
இதனை பொருத்து கொள்ள முடியாமல் அய்யய்யோ பிசிஆர் சட்டத்தை வைத்து தான் அனைத்து சாதியினரையும் மிரட்டி பணம் சம்பாதித்து பிழைப்பு நடத்தி வருகின்றோம் அதனை தடுக்கின்ற நோக்கில் கூட்டம் நடத்தினால் எப்படி என்று கூட்டத்தை எதிர்த்து கூட்டம் நடைபெறும் மண்டபம் அருகிலேயே விசிகவினர் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை எப்படி அனுமதித்தது?

எனவே தமிழகத்தில் திமுக தயவால் விசிக இரண்டு சீட்டை வைத்துகிட்டு திமுகவுக்கு துரோகம் செய்துவிட்டு தவெகவுடன் கூட்டணி அமைத்துகிட்டு அமைச்சர் பதவியையும் அபகரித்துவிட்டு ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கின்றோம் என்ற அகங்காரத்தில் அனைத்து சாதியினர் மீதும் பொய் பிசிஆர் வழக்கு தொடுப்பதும்,அதனை எதிர்ப்பவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்துவதும்,சாலையை மறித்து போராட்டம் நடத்துவதும் போன்ற தமிழகம் முழுவதும் அராஜகத்தில் ஈடுபட்டு சாதி கலவரத்தை தூண்டும் விதமாக செயல்படும் விசிகவை தவெகவுடடைன் கூட்டணி வைத்து கொண்டால் தவெக கட்சிக்கும் ஆட்சிக்கும் தான் அனைத்து சமூக மக்கள் மத்தியில் கெட்டப்பெயரை உண்டாக்கும் என்பதால் விசிகவை தவெக கூட்டணியில் இருந்து முதலில் வெளியேற்ற வேண்டுமென தமிழக முதல்வரை இந்துமக்கள்கட்சி வலியுறுத்துகிறது.

இல்லையென்றால் தமிழகத்தில் சமூகநீதியையும்,சமூக நல்லிணத்தையும், சகோதரத்துவத்தையும் சீர்குழைக்கும் வகையில் ஒவ்வொரு சாதி சமுகத்தினரிடம் வேண்டுமென்றே திட்டமிட்டு வம்புழுக்கும் விசிக குண்டர்களின் அடாவடி அராஜாகத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுவிடும் என்பதை இந்த அறிக்கையின் மூலமாக இந்துமக்கள்கட்சி தெரிவித்து கொள்கிறது.