விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி குடிநீர் ஆதாரமாக விளங்கும் வெம்பக்கோட்டை அணையின் நீர்மட்டம் 24 அடி உயரம் ஆகும். கடந்த எட்டு மாதங்களாக அணைக்கு நீர்வரத்து இல்லாததால் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

கோடை மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்று போய்விட்டது. விவசாய பணிகளும் ஏதும் நடைபெறாததால் வலது மற்றும் இடது பாசன கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. பெரும்பாலும் ஆவணி மாதத்தில் கோடை உழவு நடைபெறும் அப்போது வெம்பக்கோட்டை அணையில் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்படும். தண்ணீர் வல்லம்பட்டி கண்மாய், சாத்தூர் அருகே உள்ள நென்மேனி கண்மாய்க்கு தண்ணீர் சென்றடையும் .

அதனை பயன்படுத்தி அப்பகுதியை சேர்ந்த மக்கள் நெல் , பருத்தி மற்றும் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்வார்கள். அணையில் கடந்த ஐந்து மாதங்களாக பொது அளவு தண்ணீர் இல்லாததால் விவசாயத்திற்கு தண்ணீர் சிறிதளவு கூட திறக்கப்படவில்லை இந்த நிலையில். கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

கடந்த மாதம் 10அடி உயரம் இருந்த நீர்மட்டம். தற்போது ஆறு அறை அடியாக குறைந்துவிட்டது. அதில் இரண்டடி உயரம் மட்டுமே தண்ணீரை பயன்படுத்த முடியும் அதற்கு கீழே சகதியாக இருப்பதால் தண்ணீரை பயன்படுத்த முடியாது. அணையின் அருகில் உள்ள கிணறுகள் வற்றி வரும் நிலையில் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை உருவாகியுள்ளது.




