• Thu. Aug 27th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை உறவினர்கள் பள்ளியை முற்றுகை..,

ByKalamegam Viswanathan

Aug 27, 2026

மதுரை மாவட்டம் சமயநல்லூர் பர்மா காலனியை சேர்ந்த அந்திஸ்வரன் ஆனந்த லெட்சுமி இவரது மகள் அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகின்ற நிலையில்

ஆசிரியர் மாணவியை திட்டியதாக கூறப்படுகிறது,

இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து வந்த சமயநல்லூர் போலீசார் இறந்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த மாணவி இறப்பதற்கு முன் தனது பெற்றோருக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசாரின் விசாரணையில் இறந்த மாணவி பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றும் தற்போது 11ம் வகுப்பில் படிப்பில் பின் தங்கியதாலும் மேலும் பள்ளி மாணவர் ஒருவரை காதலித்து வந்ததும் அதனை நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்திருந்ததாகவும், இதனை பார்த்த ஆசிரியர் மற்றும் பெற்றோர் மாணவியை கடுமையாக கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மாணவி நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனையறிந்த உறவினர்கள் நூற்றுக் கணக்கனோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கையிட்டு பள்ளியை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அலங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டதை தொடர்ந்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.

பள்ளி மாணவி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது