• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி..,

ByM.JEEVANANTHAM

Aug 26, 2026

மயிலாடுதுறை மாவட்டத்தில், கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு, கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

முக்கிய குடிநீர் ஆதாரமான கொள்ளிடம் ஆறு வறண்டு போனதால், மயிலாடுதுறை நகரில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதன் மூலமாக கடந்த சில தினங்களாக, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை மயிலாடுதுறை நகரில், பட்டமங்கலம் ஆராய தெரு , காமராஜர் தெரு உள்ளிட்ட பகுதிகளில், இன்று காலை நகராட்சி குடிநீர் குழாய்கள் மூலம் வந்த குடிநீர், கருமையான நிறத்துடன் துர்நாற்றத்துடன் இருந்தது. சாக்கடை கழிவு நீர் கலந்த குடிநீர் என்பதால், இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மயிலாடுதுறை நகரின் பல்வேறு இடங்களில், பாதாள சாக்கடை கழிவு நீர் தொட்டிகளில் இருந்து சாக்கடை வெளியேறி சாலை முழுவதும் நிரம்பி உள்ள நிலையில், அந்தத் தண்ணீர், குடிநீருடன் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உடைப்பு எந்த இடத்தில் ஏற்பட்டுள்ளது என்று ஆய்வு செய்து உடனடியாக இதனை சரி செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்பொழுது நகரம் எங்கும், மர்ம காய்ச்சல் பரவி வரும் நிலையில், சாக்கடை கலந்த குடிநீரை பருகுவதால் நோய் தாக்கம் அதிகரிக்கும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். நகராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் குடிநீர் டேங்கர் லாரிகள் மூலமாக தற்காலிகமாக தண்ணீர் வழங்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.