• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அறுந்து விழுந்த காங்கிரஸ் கொடி . . . தாங்கி பிடித்த சோனியா காந்தி

கோகலே, மகாத்மா காந்தி உள்ளிட்ட பல்வேறு சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் ஜவகர்லால் நேரு, காமராஜர், இந்திரா காந்தி,என நாட்டின் முக்கிய தலைவர்கள் இருந்த காங்கிரஸ் கட்சி துவங்கி 137 வது நிறுவன ஆண்டு விழாவை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி நிறுவன தினத்தை முன்னிட்டு டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திள் நடைபெற்ற விழாவில் கட்சியின் கொடியினை அக்கட்சி தலைவர் சோனியா காந்தி ஏற்றினார். அப்போது எதிர்பாராத விதமாக கொடி அறுந்து அவரது கைகளிலேயே விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பானது.