புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள நவீன ஆவின் பாலகம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பால் உற்பத்தியாளர்களை வஞ்சிக்க கூடாது, விவசாயிகள் வயிற்றில் அடிக்கக்கூடாது, பால் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளதாக சொல்லி ஏமாற்றக்கூடாது, பால் கொள்முதல் விலையை உயர்த்தி கொடுக்க வேண்டும் பசும்பாலுக்கு 50 ரூபாயும் எருமை பாலுக்கு 60 ரூபாயும் வழங்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பி நூற்றுக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்போதுள்ள காலகட்டத்தில் மாடுகளை பராமரிக்க முடியாத நிலை இருப்பதாகவும் கடும் வரட்சி தீவன விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் பாலுக்கு கொள்முதல் விலை கொடுப்பதை விட அதிகமாக இருப்பதாகவும் தனியார் பால் நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து பாலை கொள்முதல் செய்து வருகின்றனர். இதேநிலை நீடித்தால் ஆவினுக்கு முழுமையாக பால் கொடுக்க முடியாத நிலை பால் உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும்.

அதனால் தற்போது உயர்த்தி உள்ள பால் கொள்முதல் விலை எந்த விதத்திலும் போதுமானதாக இல்லை அதனால் பால் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் அவர்கள் சொல்லும் பால் கொள்முதல் விலை அதிகபட்சமாக 8.6 எஸ்என்எப் உள்ள பாலுக்கான கொள்முதல் விலை புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 8.6 என்ற சதவீதத்திற்கு பாலில் இதுல ஊட்டச்சத்துக்கள் இருக்காது.
அதனால் இங்கு உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு குறைந்தபட்ச பால் உற்பத்தி விலை நான் கிடைக்கிறது. இதுவரை பால் கொள்முதல் விலை 33 ரூபாய் தாண்டி இங்கு உள்ள யாரும் அதிகம் பெறவில்லை. அதனால் இந்த அரசு விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என வேதனையுடன் கோரிக்கை வைத்தனர்.




