• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிள் சென்ற மனைவி தவறி உயிரிழப்பு..,

ByKalamegam Viswanathan

Aug 24, 2026

சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடுபட்டி கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் 30. இவர்6 வருடத்திற்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே பாறைப்பட்டிகிராமத்தில் வெற்றிசெல்வி வயது 24 என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

நேற்று கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் செம்பட்டி அருகே உறவினர் திருமணத்திற்கு சென்று நேற்று மாலை ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். வரும் வழியில் சித்தாதிபுரம் அணைப்பட்டி இடையே மோட்டார் சைக்கிள் ரோட்டில் இருந்த கல் மீது ஏறி இறங்கியுள்ளது. இதில் வெற்றிச்செல்வி தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி ரோட்டில் விழுந்துள்ளார்.

படுகாயம் அடைந்து உயிருக்கு வெற்றிச்செல்வி போராடி உள்ளார். இவரை சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே வெற்றிச்செல்வி இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இவர்களுக்கு குழந்தை இல்லை திருமணமாகி ஆறு வருடம் என்பதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை செய்ய உள்ளார்.

இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செய்தி கேட்டு பாறைப்பட்டியிலிருந்து உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து கதறி அழுதது நெஞ்சை உருக்கியது.