மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே கட்டபுலி நகர் பகுதியில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீட்டினை மாற்றுத்திறனாளிகள் 13 நபர்களுக்கு வழங்கப்பட்டது ஸ்டார் பார்வையற்றோர் அறக்கட்டளை சார்பில் கட்டி முடிக்கப்பட்ட இந்த வீட்டினை பயனாளிகளுக்கு வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிறுவனர் மோகன் கலந்துகொண்டு வீடுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பொறுப்பாளர் ராஜேஷ் கண்ணா பிச்சை பாண்டி விந்தியா என்றவல்லரசு பிரபாகரன் ராம முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளராக தேசிய மாற்றுத்திறனாளிகள் ஆணையத்தின் தலைமை ஆணையர் கோவிந்தராஜ் கலந்துகொண்டு சிறப்பு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்த தருணம் மிகவும் மகிழ்ச்சியான தருணம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இடமாக மட்டுமல்லாமல் வீடும் கட்டிக் கொடுத்துள்ளது பாராட்டுக்குரியது. இதுபோல் அரசின் அனைத்து திட்டங்களும் கிடைக்க வழி செய்ய வேண்டும் அரசின் எந்த திட்டமானாலும் 5 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்க வேண்டும் ஆனால் அதில் ஏமாற்றமே மிஞ்சுகிறது ஆனால் இந்த நிகழ்ச்சியை ஒரு முன்னோட்டமாக எடுத்துக் கொள்ளலாம் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு இங்கே வீடு வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு என்ன திட்டங்கள் உள்ளது சலுகைகள் உள்ளது என அவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கமாகும்
மேலும் மாற்றுத்திறனாளிகளின் ஆணையம் என்பது குறைதீர்க்கும் மன்றமே அரசாங்கத்தில் உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் அதைப் பெற்று கொடுப்பது இந்த ஆணையத்தின் நோக்கமாக இருந்து வருகிறது.
இந்த வீட்டில் இவர்கள் குடியிருந்து மற்றவர்களுக்கு முன்னுதாராணமாக திகழ வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் தொகை மிகவும் குறைவாகவே உள்ளது. அவ்வாறு குறைந்த அளவு ஒதுக்கப்படும் பணமும் முறையாக செலவிடப்படுவதில்லை என்பதே உண்மை. ஆகையால் அதிகாரிகள் இதில் முழு கவன ம் எடுத்து மாற்று திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் தொகை முழுமையாக செலவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் விளையாட்டு துறையில் மாற்றுத்திறனாளிகள் நிறைய பதக்கங்கள் வாங்கி வருகிறார்கள். ஆனால் அதற்கான உரிய மரியாதை அவர்களுக்கு தரப்படுவதில்லை மற்றவர்களுக்கு கொடுப்பது போல் மாற்றுத்திறனாளிகளுக்கும் கொடுக்க வேண்டும். மற்றவர்களுக்கு ஒரு கோடி கொடுக்கும் இடத்தில் இவர்களுக்கு 10 லட்சம் போராடி வாங்குவதே சிரமமாக உள்ளது.
அந்தத் தொகையையும் மிகவும் சிரமப்பட்டு வாங்கி வழங்கி வருகிறோம் மற்றவர்களை விட மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டுத்துறையில் 25 சதவீதம் கூடுதலாக கொடுக்க வேண்டும் என்பது சட்டமாக உள்ளது. ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில்லை இனிவரும் காலங்களிலாவது இந்த குறையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எவ்வாறு கூறினார்.




