• Wed. Oct 7th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கனவு முதல் களம் வரை – CA வழிகாட்டல் நிகழ்ச்சி..,

ByKalamegam Viswanathan

Aug 21, 2026

மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி வணிகவியல் மன்றம் மற்றும் சார்டட் அக்கவுன்டன்ட் ஆப் இந்தியா நிறுவனம் இணைந்து நடத்திய கனவு முதல் களம் வரை – CA வழிகாட்டல் நிகழ்ச்சி அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

தலைமையாசிரியர் ஷேக்நபி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சஷ்டி நிவாஷ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டய கணக்காளர் (CA) படிப்பின் முக்கியத்துவம் குறித்தும் கடின உழைப்புடனும், ஒழுக்கத்துடனும் செயல்பட்டால் CA தேர்வில் எளிமையாக வெற்றி பெறலாம் என எடுத்துரைத்து  அரசு மற்றும் தனியார் துறைகளிலுள்ள வேலைவாய்ப்புகள் பற்றி விளக்கமாக கூறினார்.

மாணவர்கள் ஆர்வமுடன் CA கல்வி குறித்த சந்தேகங்களைக் கேட்டுத்தெரிந்து கொண்டனர். மதுரை மாவட்ட தமிழியக்க நிர்வாகிகள் பழனிச்சாமி, காளிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவித் தலைமையாசிரியர்கள் முகமது ரபி மற்றும் அல்ஹாஜ் முகமது ஆகியோர் செய்தனர்.