விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள ஸ்ரீ காளிஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான காளீஸ் ஸ்பெக்ட்ரம் எக்ஸ்போ 2026 என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் பல்வேறு துறை சார்ந்த ஒருங்கிணைந்த கண்காட்சி நடைபெற்றது.

கண்காட்சி அரங்கினை பார்வையிட வந்த பள்ளி மாணவியை கல்லூரியின் செயலாளர் செல்வராஜன் ரிப்பன் கட் செய்து திறந்து வைக்க ஏற்பாடு செய்தார்.
தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் உள்பட 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 3000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கண்காட்சியினை சுற்றி பார்வையிட்டனர்.

கண்காட்சியில் ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி மாணவிகளின் படைப்பாற்றல், புதுமை சிந்தனை, பல்வேறு துறை சார்ந்த தனித் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் அறிவியல், தொழில்நுட்பம், வணிகம் ,கல்வி, நிர்வாகம் ,கலை, மற்றும் ,மொழி, ஆகியவற்றை கண்காட்சியாக வைத்திருந்தனர்.
கண்காட்சியில் தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஐரோப்பா, உள்பட 80க்கும் மேற்பட்ட அயல் நாடுகளில் இருந்து பயன்படுத்தப்படும் கரன்சி நோட்டுகளை கல்லூரி மாணவ மாணவிகள் ஆச்சரியமாக பார்வையிட்டனர்.

தொடர்ந்து மங்கோலியா, துபாய் நாடுகளில் பயன்படுத்தப்படும் கரன்சி நோட்டுகள் பற்றி விவரம் கேட்டறிந்தனர்.
மேலும் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்ட அஞ்சல் தலைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன
தமிழ் ,அறிவியல் ஆங்கிலம், இயற்பியல், விலங்கியல், உள்பட பல்வேறு துறைகள் சார்பில் வைக்கப்பட்ட கண்காட்சி பொருட்களை பார்வையிட வந்திருந்த மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
கண்காட்சியில் பண்டைய காலத்தில் பயிற்றுவிக்கப்பட்ட குருகுலக் கல்வி முதல் தற்போதைய நவீன காலத்தில் பயன்படுத்தப்படும் வகுப்பறைகள் குறித்து தனித்தனியாக வைக்கப்பட்ட கண்காட்சியையும் பார்வையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ,தஞ்சை பெரிய கோவில், கழுகுமலை உள்ள முருகன் கோவில், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள முருகன் கோவிலில் தத்ரூபமாக வடிவமைத்தது இருந்ததை பார்வையிட்டனர்.
ஆங்கில மொழியில் நாடகத்தையும் மாணவ மாணவிகள் நடித்துக் காட்டினார்.
பார்வையிட்ட மாணவ மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் இணை செயலாளர் ராஜேஷ் ,முதல்வர் பாலமுருகன், துணை முதல்வர் முத்துலட்சுமி ஆகியோர் செய்து இருந்தனர்.




