• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தேனியில் ஒக்கலிக கவுடர் மகாஜன சங்கத்தின் பரிசளிப்பு பாராட்டு விழா!

தேனி மாவட்ட ஒக்கலிக கவுடர் மகாஜன சங்கம் சார்பில் பிளஸ் 2, மருத்துவ படிப்பு உட்பட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா, பழனிசெட்டிபட்டியில் நடந்தது.


தமிழக ஒக்கலிக கவுடர் மகாஜன சங்க மாநில தலைவர் வெள்ளிங்கிரி தலைமை வகித்தார். அறங்காவலர் ரகுபதி, தேனி மாவட்ட ஒக்கலிக கவுடர் மகாஜன சங்க
கவுரவ தலைவர் மனோகரன் முன்னிலை வகித்தனர். தேனி மாவட்ட ஒக்கலிக கவுடர் மகாஜன சங்க தலைவர் பிரகாஷ் வரவேற்றார். தேனி மாவட்ட ஒக்கலிக மகாஜன சங்க செயலாளர் விஸ்வநாதன் சங்க செயல்பாடுகள் குறித்த அறிக்கை, பொருளாளர் மும்மூர்த்தி நிதிநிலை குறித்த அறிக்கை வாசித்தனர்.


தமிழக ஒக்கலிகர் மகாஜன சங்க கவுரவ தலைவரும், ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை நிறுவனருமான ஓ.ஆறுமுகசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கினார். விழாவில், தேனி பொம்மையகவுண்டன்
பட்டியை சேர்ந்த சிவராமன் உட்பட 80-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஒக்கலிக கவுடர் சங்க நிர்வாகிகள், சமுதாயத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள், மாணவ, மாணவியர் என, ஏராளமானோர் கலந்து கொண்டனர். பெரியகுளம் ஒன்றிய ஒக்கலிக கவுடர் மகாஜன சங்க கவுரவ தலைவர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.