• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

80 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்!!

ByS. SRIDHAR

Aug 15, 2026

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக கீழ 3ஆம் வீதி அரசு இராணியார் உயர்நிலைப் பள்ளியில் 80 ஆவது சுதந்திர தின விழா கொடியேற்றம் சங்கத் தலைவரும் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவருமான S.அப்துல் ரகுமான் என்ற சேட் அவர்கள் தலைமையில் கொடியேற்றி வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில் தலைமை ஆசிரியர் (பொ) S.பிரேமலதா தலைமை உரை ஆற்றினார் நிகழ்ச்சியில் பொருளாளர் கண.மோகன் ராஜா, பேராசிரியர் டாக்டர் S.சரவணன் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்வில் R.சங்கர், V.சேகர், T.தயாளன், சண்முகம், கார்த்திக் கவிநாடு ராஜசேகர், இக்பால், அஜீத், பாண்டி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிறைவாக செயலாளர் K.மணிகண்டன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.