80வது சுதந்திர தினம் வீடுதோறும் தேசிய கொடி ஏற்றிட பாரத பிரதமர் மாண்புமிகு. நரேந்திர மோடி அவர்களின் ஆணைக்கிணங்க மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளையின் சார்பாக பொதுமக்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும், தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களால் துவங்கப்பெற்ற அகில இந்திய ஹரிஜன சேவக சங்கத்தின் வாயிலாக தமிழ்நாடு கிளையின் கீழ் நடைபெறும்

மதுரை மாவட்டம் செனாய் நகர் 24 குமாரசாமி ராஜா வீதியில் 1938ம் ஆண்டு கனம்.திரு.ராஜாஜி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு இன்றளவும். இயங்கி வரும் சேவாலயம் மாணவர் விடுதிக்கும், 1964ம் ஆண்டு தியாகச் செம்மல் திரு.கக்கன் அவர்களால் மதுரை மாவட்டம் மேலூர் 17 பாரதியார் புரத்தில் துவங்கப்பெற்ற கஸ்தூரிபா மாணவிகள் விடுதிக்கும் மாணவ மாணவிகளுக்கு சுதந்திர உணர்வு ஊட்டம் பெற்றது.
தொடர்ச்சியாக அரசு ராசாசி மருத்துவமனையின் முதல்வர் திரு.அருள் சுந்தரேஷ்குமார் அவர்களை சந்தித்து தேசிய கொடியினை வழங்கி சுதந்திரதின வாழ்த்துக்களை அறக்கட்டளை நிறுவனர் மாற்றம் தேடி பாலமுருகன் அவர்கள் தெரிவித்தார்கள்.






