• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கோவையில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் தியான நிகழ்ச்சி..,

BySeenu

Aug 14, 2026

கோவையில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் தியானம் துவங்கியது

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரால் 1917-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ‘யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா’ சார்பில், கோவையில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் தியான நிகழ்ச்சி துவங்கியது.

கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ சாய் விவாஹா மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், . மகிழ்ச்சியான மற்றும் வளமான வாழ்விற்கான திறவுகோல்’ என்ற தலைப்பிலான இந்த ஆன்மீக நிகழ்ச்சியில், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் மூத்த சன்னியாசி சுவாமி ஸ்மரணானந்த கிரி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கீர்த்தனை, தியானம், சுவாசப் பயிற்சி மற்றும் சத்சங்கம் ஆகியவை நடைபெற உள்ளன. இதில் கலந்துகொள்ள அனுமதி முற்றிலும் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்சங்கம், தியானம், ஒய் எஸ் எஸ் தியான உத்திகள் மற்றும் “எப்படி வாழ வேண்டும்” என்பதற்கான வாழ்க்கை முறை போதனைகள் கற்றுத்தரப்படும். இதற்கு முன்பதிவு செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கோவை, திருச்சி ரோடு பெர்க்ஸ் பள்ளி வளாகம் அருகில் உள்ள ‘யோகதா சத்சங்க தியான கேந்திரா’ செய்துள்ளது.