• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்ற தொகுதி மறுவரையறையினை எதிர்த்து கண்டனப் பேரணி..,

Byமுகமதி

Aug 11, 2026

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் மத்திய பா ஜ க அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொண்டு வரும் பாராளுமன்ற தொகுதி மறுவரையறையினை எதிர்த்து கண்டனப் பேரணி, புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு தலைவர் DD. பெனட் அந்தோணி ராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்டக் காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு பேரணியில் பங்கேற்றனர். புதுக்கோட்டை காந்தி பூங்கா அருகில் நிறைவு பெற்ற பேரணியில் அங்கு அமைக்கப்பட்ட பாராளுமன்ற தொகுதி மறுவரையறையினால் தமிழ்நாடு பிரதிநிதித்துவம் எவ்வாறு குறைக்கப்படுகிறது என்று விளக்கி பெனட் அந்தோணி ராஜ் விளக்கிப் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர்கள் வேங்கை அருணாசலம், ஆலங்குடி தமிழ்ச் செல்வன், கறம்பக்குடி வட்டாரத் தலைவர்கள் ஞானசேகரன், வீரையா வீ. தமிழ்ச்செல்வன், அன்னவாசல் சுப்பிரமணியன், மாநகரத் தலைவர்கள் மதன் கண்ணன், பாரூக் ஜெய்லானி, வட்டார காங்கிரஸ் தலைவர் சூர்யா பழனியப்பன், சிவக்குமார், கவுன்சிலர் ராஜா முகமது, தங்கசிவா, கீரனூர்சண்முகம், விஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பழனிசாமி பாலாண்டார், செம்பை மணி. தகவல் ஊடகப்பிரிவு நிர்வாகிகள் சரவணன், ரியாஸ் முகமது, விராலிமலை அன்பழகன், சக்தி ரங்கராஜன், சிறுபான்மைப் பிரிவு குட்லக் அப்துல்லா, துரைக்கண்ணன், மகளிர் அணித் தலைவர் கவுரி உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.