மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரே அணையானதும் பாலமேடு பகுதியின் ஒரே நீர் ஆதாரமான சாத்தையாறு அணை, போதிய நீர்வரத்து முறையான நீர்த்தேக்க வசதி மற்றும் பருவமழை பொய்த்தது உள்ளிட்ட காரணங்களால் தற்போது ஒரு சொட்டு நீரின்றி முற்றிலுமாக வறண்டு பிளவுகள் ஏற்பட்டு பாலைவனம் போல் காட்சியளிக்கிறது!

பாலமேடு அருகே அமைந்துள்ள 98 ஏக்கர் பரப்பளவு மற்றும் 29 அடி நீர் கொள்ளளவு கொண்ட சாத்தையாறு அணை, திண்டுக்கல் சிறுமலை ஓடைகளின் மூலமாக நீர்வரத்தைப் பெறுகிறது.
இந்த அணையின் மூலம் இப்பகுதியைச் சேர்ந்த 11 கண்மாய்களும், சுமார் 2,000 ற்கும்
மேற்பட்ட ஏக்கர்களில் விவசாய நிலங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன.
ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றுவிட்டது.
இதனுடன் பருவமழையும் பொய்த்துப் போனதால், அணையில் தேங்கியிருந்த குறைந்தளவு தண்ணீரும் முற்றிலுமாக ஆவியாகி வற்றியது.
தற்போது இந்த அணை ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வறண்டு கிடக்கும் பிரத்யேகக் கழுகு காட்சிகளில் முழுமையாகப் பாலைவனம் போல் காட்சிகளை பார்த்து வருகிறோம்

அணை இவ்வாறு வறண்டு கிடப்பதால், அப்பகுதியில் உள்ள கால்நடைகளும் வனவிலங்குகளும் குடிநீரின்றி கடும் அவதிக்குள்ளாகி வருவதுடன், தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இந்த அணையின் மொத்த கொள்ளளவான 29 அடியில், சுமார் 11 அடிக்கு மேல் வண்டல் மண் மேடாகிவிட்டதே தண்ணீர் சேமிக்க முடியாததற்குக் முக்கியக் காரணம் என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, இந்த இக்கட்டான சூழ்நிலையைப் போக்க தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, சாத்தையாறு அணையைத் தூர்வாரத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

மேலும், அணையை தூர்வாரும் போது வெட்டி எடுக்கப்படும் வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும், அந்த மண்ணை விவசாயத் தேவைக்காக மட்டுமே பயன்படுத்திட அனுமதிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையின் ஒரே அணை மற்றும் நீர் ஆதாரமாக விழங்கக்கூடிய சாத்தையாறு அணை ஒரு சொட்டு தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் பிரத்தேக ட்ரோன் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.





