விருதுநகர் மாவட்ட உரிமம் பெற்ற சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மதுரை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க கூடுதல் இயக்குனரிடம் சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தொடர் ஆய்வு காரணமாக சிறு குறைபாடுகளுக்கும் கால அவகாசம் தராமல் தடை அணை உத்தரவு பிரபிக்கப்பட்டுள்ளது. தடையாணை எப்போது விளக்கப்படும் என தெரியாமல் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பட்டாசு உற்பத்தியாளர்களும் ஆலையில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் மிகுந்த பாதிப்பு உள்ளாகி வருகிறோம். தடையாணை எத்தனை நாட்களில் விளக்கப்படும் என்ற விவரம் சம்பந்தப்பட்ட பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

மூடப்பட்ட ஆலைகளை திறக்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் மேலும் ஆய்வு என்று பெயரில் நடவடிக்கை காரணமாக பட்டாசு உற்பத்தி தொடர இயலாது .அதனால் வரும் 12 ம்தேதி முதல் பட்டாசு ஆலைகளை மூடி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் அதற்கு உரிய தீர்வு காணுமாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.






