• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

மதுரை ஆவினில் ரூ.35 லட்சம் ஊழல்!விற்பனையான தொகை வரவு வைக்காமல் முறைகேடு!

ByKalamegam Viswanathan

Aug 10, 2026

மதுரை ஆவி­னில் 35 லட்­சம் ரூபாய் முறை­கேடு நடந்­த­தாக குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ளது. 3 மண்­டல ஆவின் அலு­வ­ல­கங்­க­ளில்விற்­ப­னை­யான தொகையைவரவு வைக்­கா­மல் முறை­கேடு செய்­த­தாக புகார் எழுந்­துள்­ளது.

மதுரை ஆவி­னில் விற்­பனை பொருட்­க­ளுக்­கான தொகை சிவ­கங்கை சாலை­யில் உள்ள பிர­தான கிளை­யில் வரவு வைக்­கப்­ப­டும். சிவ­கங்கை சாலை­யில் உள்ள ஆவி­னின் கிளை­யில் தொகையை வரவு வைக்­கா­மல் முறை­கேடு நடந்­துள்­ளது வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளது.

அதன்­படி, ஆரப்­பா­ளை­யத்­தில் 21 லட்­சம் ரூபாய், பி.பி.குளத்­தில் 7 லட்­சம் ரூபாய், பழங்­கா­நத்­தத்­தில் 7 லட்­சம் ரூபாய், முறை­கேடு நடந்­துள்­ளது. 3 விற்­பனை நிலை­யங்­க­ளில் வசூ­லான தொகையைபிர­தான ஆவின்கிளை­யில் செலுத்­தா­மல் முறை­கேடு நடந்துள்ளது.

35லட்­சம் ரூபாய் முறை­கேடு தொடர்­பாக பி.பி.குளம், ஆரப்­பா­ளை­யம் ஆவின் கண்­காணிப்­பா­ளர்­க­ளி­டம் விசா­ரணை நடை­பெற்று வரு­கி­றது. ஆவின்மேலா­ளர் முத்து மாத­வன்,குழு அமைத்து சம்­பந்­தப்­பட்ட ஊழி­யர்­க­ளி­டம் விசா­ரணை நடத்தி வரு­கி­றார்.