• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

சமயபுரம் மாரியம்மன் கோவில் செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கியஅன்புக்கரங்கள் ட்ரஸ்டின்..,

Byமுகமதி

Aug 9, 2026

புதுக்கோட்டை மாவட்டத்தின் இருந்து பல்வேறு கிராமங்களில் உள்ள பக்தர்களும் நகர்ப்புறங்களில் உள்ள பக்தர்களும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஆடி மாதங்களில் நேர்த்திக்கடனுக்காக பாதசாரியாக நடந்து சென்று வழிபட்டு வருவது வழக்கம். அவ்வாறு செல்லும் பக்தர்கள் மதிய நேரத்தில் சாலை ஓரத்தில் உள்ள மரத்தடி நிழல்களில் ஓய்வெடுத்தும் காலை மாலை மற்றும் இரவு நேரங்களில் நீண்ட தூரம் நடந்தும் செல்வது வழக்கம்.

அவ்வாறு செல்லும் போது கடந்த காலங்களில் பல சாலை விபத்துகள் ஏற்பட்டு பலர் காயமுற்றும் சிலர் இறந்த சம்பவங்களும் நடந்தேறிவிட்டன. இதை தடுக்க பல்வேறு தரப்பினரும் சமயபுரம் செல்லும் பக்தர்களுக்கு ஏதாவது மாற்றிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் புதுக்கோட்டையில் இயங்கி வரும் அன்புக்கரங்கள் ட்ரஸ்டின் நிர்வாகியான இந்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக பக்தர்களுக்கு அவர்கள் தோளில் அல்லது தலையில் சுமந்து வரும் பையில் பிரதிபலிப்பான் என்று சொல்லக்கூடிய ரிப்லக்ஷன் ஸ்டிக்கர் ஒட்டினால் சரியாக இருக்கும் என்று யோசித்தார். இந்து அந்தப் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் அணி பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார்.

அந்த அடிப்படையில் கடந்த மூன்று வாரங்களாக புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து வரும் நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கும் அவர்களது பைகளில் பிரதிபலிப்பான் ஸ்டிக்கர்களை தனது மகளிர் அணி பொறுப்பாளர்களை கொண்டு ஒட்டி வைத்து உதவிகள் செய்தார். மேலும் பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் பக்தர்களுக்கு வழங்கி பாதுகாப்பாக செல்வதற்கு அறிவுரைகளை வழங்கினார்.

மேலும் போக்குவரத்துக் காவலர்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் அடங்கிய கையேடுகளை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணியின் பொறுப்பாளர்களான
புஷ்பா, பிரியங்கா, கனகா, சித்ரா, ராணி உள்ளிட்டோர் மகளிர் அணியினர் பங்கேற்றனர்.