• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

முதல்வர் விஜயின் மகனின் புகைப்படத்தோடு இடம்பெற்ற போஸ்டர்..,

ByKalamegam Viswanathan

Aug 8, 2026

தமிழக வெற்றி கழகத்தின் மதுரை புறநகர் கிழக்கு ஒன்றியம் சார்பில் மதுரை முக்கிய பகுதிகளில் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.

அதில் தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது பின்புறத்தில் அவரது மகன் இருப்பது போன்றும் மதுரையைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கல்லணை மற்றும் அமைச்சர் நிர்மல் குமார் உள்ளிட்டோர்கள் இருக்கக்கூடிய புகைப்படத்தோடு

தலைவன் அங்க போகணும் அவசியம் இல்லை … போகணும் நெனச்சாலே போதும் தமிழகத்தை நோக்கி சீறிப் பாய்கிறது காவேரி

என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் தமிழக முதல்வர் விஜய் அவர்களுடைய முதல்வனும் இருப்பது போன்ற புகைப்படங்கள் மதுரை முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது தற்போது பேசு பொருளாகி இருக்கிறது.