• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

கட்டுப்பாட்டை இழந்த கார், இருசக்கர வாகனங்கள் மீது மோதி தீபிடித்து எரிந்த சம்பவம்..,

ByP.Thangapandi

Aug 4, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணி சுங்கச்சாவடி பகுதியில் மதுரையிலிருந்து உசிலம்பட்டி நோக்கி வந்த கார், சுங்கச்சாவடி முன்பு இருந்த வேகத்தடையின் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த இருசக்கர வாகனம் மற்றும் நின்றிருந்த இருசக்கர வாகனம் என 2 இருசக்கர வாகனங்கள் மீது மோதி தீ பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.,

இந்த விபத்தில் காரில் வந்த உசிலம்பட்டியைச் சேர்ந்த செந்தில் மற்றும் அவரது மனைவி, இருசக்கர வாகனத்தில் இருந்த அருண், மோகன்ராம் உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்தனர்., காயமடைந்த 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.,

தகவலறிந்து விரைந்து வந்த செக்காணூரணி காவல் நிலைய போலீசார், இந்த விபத்து தொடர்பாக தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,

கட்டுப்பாட்டை இழந்த கார் இருசக்கர வாகனங்கள் மீது மோதி தீ பிடித்து எரிந்த சம்பவம் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.,