• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கிய பெண்: கோவையில் அதிர்ச்சி..,

BySeenu

Aug 4, 2026

கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து, கடையில் இருந்த ஐபோனை (iPhone 13) நைஸாகப் பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்மணியின் ‘பகீர்’ சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் முன்பு உள்ள பிரபல சிவா டெக்ஸ்டைல்ஸ் அருகே ‘ஆஞ்சநேயா’ என்ற செல்போன் விற்பனை மற்றும் உதிரிப்பாகங்கள் கடை இயங்கி வருகிறது. கடந்த வாரம் புதன்கிழமை அன்று, இந்தக் கடைக்குச் சாதாரண வாடிக்கையாளரைப் போலப் பெண் ஒருவர் வந்து உள்ளார்.

​கடையில் இருந்த ஊழியர்களிடம் செல்போன்கள் வாங்குவது போல நடித்துப் பல மாடல்களைக் காண்பிக்குமாறு கேட்டுப் பார்த்துக் கொண்டு இருந்தார்.

அப்போது, மேசையின் மீது வைக்கப்பட்டு இருந்த சுமார் ரூ.20,000 மதிப்பிலான ‘ஐபோன் 13’ போனை பார்த்த அந்தப் பெண், அதை யாருக்கும் தெரியாமல் அமுக்கத் திட்டமிட்டு உள்ளார்.

ஊழியர்களின் கவனம் வேறு பக்கம் திரும்பிய நொடியில், அங்கு இருந்த மற்ற செல்போன் பாக்ஸ்களை (Boxes) வைத்து ஐபோனை நைஸாக மறைத்து உள்ளார்.

​பின்னர், அங்கு இருந்த சூழலை நோட்டமிட்டபடி, யாருக்கும் சந்தேகம் வராத வகையில் அந்த ஐபோனை அப்படியே எடுத்துத் தனது பேண்ட் பாக்கெட்டிற்குள் சுருட்டி வைத்துக் கொண்டு, ஒன்றும் தெரியாதது போலக் கடையை விட்டு நைஸாக நழுவிச் சென்று உள்ளார்.

பின்னர் கடையில் இருந்த ஐபோன் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர், கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா (CCTV) பதிவுகளை ஆய்வு செய்தார்.

அப்போது, அந்தப் பெண்மணி மிகத் துணிச்சலாக ஐபோனை திருடித் தனது பேண்ட் பாக்கெட்டில் வைக்கும் காட்சிகள் அப்பட்டமாகப் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

​இந்தத் திடுக்கிடும் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகிச் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.