• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஊத்துக்குளி ஸ்ரீ ஐந்து வாசல் அய்யனார் கோயில் திருவிழா..,

ByKalamegam Viswanathan

Aug 1, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சி ஊத்துக்குளி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஐந்து வாசல் அய்யனார் கோவில் திருவிழா நடைபெற்றது. வருடம் தோறும் நடைபெறும் திருவிழாவில் வானவேடிக்கை கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகள் நடைபெறும்.

அதே போல் இந்த ஆண்டும் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊத்துக்குளியின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலமாக வந்தனர் ஊர்வலத்துடன் குழந்தைகள் அம்மன் வேடமிட்டு வந்தனர். பின்னர் கோவில் முன்பு முளைப்பாரி வைத்து கும்மிப்பாட்டு பாடினார்கள் இரவு கிராமத்தின் சார்பில் நாடகம் நடைபெற்றது. இன்று காலை முளைப்பாரி எடுத்து கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவிழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் முதன்மை காரர்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர் காடுபட்டி காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்