• Fri. Jul 31st, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

மதுரையில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி..,

ByKalamegam Viswanathan

Jul 31, 2026

சமூக மாற்றத்தை முன்னெடுக்கும் நோக்கில், ‘வீ தி லீடர்ஸ்’ (We The Leaders) அமைப்பின் மதுரை மேற்கு மாவட்டம் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி சார்பில் “போதை இல்லா மதுரை” என்ற விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

போதையை ஒழிப்போம்! இளைஞர்களை காப்போம்!” என்ற முழக்கத்துடன் நடைபெறும் இப்பேரணி, திருநகர் 3-வது பேருந்து நிறுத்தத்தில் தொடங்கி, 6-வது பேருந்து நிறுத்தம் வழியாகச் சென்று திருநகர் 2-வது பேருந்து நிறுத்தத்தில் நிறைவடைந்தது.

இளைஞர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி, போதையற்ற ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் உயரிய நோக்கில் இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. “சமூக மாற்றம்… நம் கையிலேயே!” என்பதை வலியுறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்பேரணியில், திருப்பரங்குன்றம் பகுதி இளைஞர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு போதை இல்லா வளமான எதிர்காலத்தை உருவாக்க அணிவகுக்குமாறு அமைப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர்.