மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் செல்லூர் இணைக்கும் உயர்மட்ட மேம்பாலமான பணியானது நடைபெற்று வருகிறது. இதில் பாலம் ஸ்டேஷன் ரோடு பகுதியில் சாலை விரிவாக்க பணிகளுக்காக சாலையை ராட்சத ஜேசிபி மூலம் பள்ளம் தோன்றும் பொழுது முல்லைப் பெரியார் கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாய் உடைந்து பல அடி தூரத்திற்கு தண்ணீர் ஆனது பீச்சி அடித்தது.

உடனடியாக ராஜத ஜேசிபி மூலமாக எடுப்பதை தற்காலிகமாக நிறுத்தினார் எனினும் சாலையில் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி சாக்கடையில் கலந்தது உடனடியாக இது சம்பவம் குறித்து குடிநீர் வழங்கல் அதிகாரி பாலகுருநாதன் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது உடனடியாக அவர் சம்பந்தப்பட்ட வார்டு அதிகாரிகளுக்கு குடிநீர் வழங்கும் இணைப்பை உடனடியாக துண்டிக்க உத்தரவிட்டார்.

எனினும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணானது முறையாக பள்ளங்கள் தோன்றும்பொழுது மாநகராட்சி அதிகாரிகளுக்கு எந்தவித தகவலும் கொடுக்காமல் தனியார் ஒப்பந்த நிறுவனம் ராட்சத்தை ஜேசிபி மூலமாக பள்ளத்தை தோன்றியது. பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.




