• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சாலை மறியல்..,

ByP.Thangapandi

Jul 29, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி 24 வார்டு பகுதிகள் உள்ளது.,

இதில் நகராட்சிக்குட்பட்ட 1 வது வார்டு இருளாயி நகர் பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்., இப்பகுதி பொது மக்களுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும் இப்பகுதியில் தெருவிளக்கு, பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டவில்லை கூறப்படுகிறது.,

இந்நிலையில் இதுகுறித்து உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.,

ஆத்திரமடைந்த இப்பகுதி வார்டு பொதுமக்கள் மதுரை- தேனி நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,

தகவல் அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் போலீசார் மற்றும் நகராட்சி பொறியாளர் சசிகுமார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்.,

இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,