ஜனநாயகன் படம் சரியாக தமிழக மக்களிடத்திலே வரவேற்பை பெறாத காரணத்தினாலேலஇன்று ஜனநாயகத்தின் தூண்களாக இருக்கிற பத்திரிக்கையாளர்களை ஒரு சட்டமன்ற உறுப்பினரே குண்டர்களை வைத்து அடியாட்களை வைத்து உயிர் போகின்ற வகையில் கடுமையான தாக்குதலை நடத்தி இருக்கிறார் என்று சொன்னால் தமிழகத்தில் தவெக ஆட்சியில் அரசியல் ஜனநாயகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது.

பத்திரிக்கையாளர்கள் ஊடகவியாளர்கள் நாட்டு நடப்பை நடுநிலையோடு கொண்டு போய் சேர்க்கின்ற ஒரு ஜனநாயக கடமையாற்றுகின்ற ஜனநாயக தூண்களாக இருக்கின்றார்கள். ஜனநாயகத்தினுடைய நான்காவது தூண்களாக மக்களுக்கு உலகத்தை உள்ளங்கையிலே கொண்டு வருகின்ற பத்திரிக்கையாளர்கள் நம் உயிரினும் மேலானவர்கள். அவர்களை இன்றைக்கு தாக்கி இருப்பது என்பது ஒட்டுமொத்த ஜனநாயகத்தின் மீது விழுந்த தாக்குதலாக பார்க்கப்படுகிறது.
தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு சேவை செய்வதற்காக மக்கள் பிரதிநிதிகளாக வந்தார்களா? அடாவடி கட்டப்பஞ்சாயத்து காட்டு தர்பார் போல உள்ளது.
ஒரு பெண் அமைச்சரே மிக கேவலமாக ஜட்டியோடு வைத்து கொன்று விடுவேன் என தமிழக வெற்றி கழக அமைச்சர் ஒரு அமைச்சரவையின் தரத்தை வெளிப்படுத்துகிற வகையில் தரம் தாழ்ந்த வார்த்தைகளை வெளிப்படுத்துகிறார்கள்.

ஒரு அமைச்சர் காலனி அணிந்து கொண்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்கிறார். ஒரு அமைச்சர் ஐபிஎல் பார்ப்பதற்காக போதை பொருளை பவுடராக நுணுக்குகிற காட்சி இப்படி அமைச்சர்கள் அடிக்கிற கூத்துகள் இந்த கட்டப்பஞ்சாயத்துகளும் அடாவடிகளும் காட்டு தர்பார்களுக்கும் எல்லையே இல்லாமல் போய்விட்டது.
இது தமிழக முதல்வர் விஜயின் கவனத்திற்கு செல்கிறதா, இந்த செய்திகளை எல்லாம் முதல்வர் படிக்கிறாரா? முதல்வர் தினந்தோறும் உளவுத்துறை அறிக்கைகளைப் படிக்கிறாரா? இல்லை விஜயின் பவர் சென்டராக இருக்கிற நட்பு வட்டத்திலே ஆட்சியை ஒப்படைத்ததை போல அதிகாரத்தை ஒப்படைத்ததை போல இந்த செய்திகளை படிப்பதையும் ஒப்படைத்து விட்டாரா? தமிழ்நாடு இப்போது யார் கையில் இருக்கிறது? முதல்வர் விஜய் கையிலா அல்லது முதல்வர் விஜய் நட்பு வட்டத்தில் உள்ள பவர் சென்டர்களின் கையிலா? இந்த அராஜகத்தை தடுத்து நிறுத்த விஜய் முன்வருவாரா? இல்லை இந்த அராஜகத்திற்கு என்டு கார்டே கிடையாதா.
அறமே தர்மமே என ஆட்சி என இருந்த காலத்தில் இப்படி தறி கெட்ட போய் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக மாறி இருக்கிறது. இது எங்கே போய் முடியுமோ இந்த கொடுமைகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என கூறினார்.




