• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மேலக்கால் பகுதியில் தினசரிமின்தடை செய்யும் அதிகாரிகளால் பொதுமக்கள் கொந்தளிப்பு..,

ByKalamegam Viswanathan

Jul 28, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தானை அடுத்து மேலக்கால் பகுதியில் தினசரி காலை முதல் இரவு வரை 50க்கும் மேற்பட்ட முறை மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் வயதானவர்கள் ஆகியோர் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.

பலமுறை மின்சார துறை அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் புகார் மூலமாகவும் மொபைல் போன் மூலமாகவும் செய்திகள் மூலமாகவும் மின்தடைக்கான காரணம் குறித்து தொடர்பு கொண்டாலோ அது குறித்து கேட்டாலோ முறையான பதிலும் அளிப்பதில்லை முறையாக மின்சாரத்தை வழங்குவதும் இல்லை. குறிப்பாக நேற்று இரவு முதல் தற்போது வரை 50க்கும் மேற்பட்ட முறை மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பலரது வீடுகளில் மின்சார பயன்பாட்டில் உள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும் பிரிட்ஜ் வாஷிங் மெஷின் டிவி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்கள் பழுதடைந்துள்ளதாகவும் வீட்டில் உள்ள பெண்கள் வேதனையுடன் கூறுகின்றனர் இது குறித்து அதிகாரிகள் எந்த கவலையும் படுவதில்லை.

முறையான பதிலும் சொல்வதில்லை என பொதுமக்கள் மற்றும் பெண்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர் இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில் காலை முதல் இரவு வரை மின்சாரத்தை நம்பி வீட்டில் எந்த ஒரு வேலையும் செய்ய முடியவில்லை. குறிப்பாக காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு உணவு தயாரிக்க கூட முடியவில்லை இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லை வயதானவர்கள் தெருக்களிலும் வீட்டு வாசல்களிலும் இரவு முழுவதும் நடமாடக்கூடிய அவலம் ஏற்பட்டுள்ளது. தயவு செய்து மின்சார துறை அதிகாரிகள் தினசரி எத்தனை மணி நேரம் மின்தடை ஏற்படும் என்பதை முன்கூட்டியே தெரிவித்தால் மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கு வசதியாக இருக்கும் என கூறுகின்றனர்.

இனிவரும் நாட்களிலாவது மின்தடை ஏற்படாத வண்ணம் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா குறைந்தபட்சம் மின்தடை ஏற்படும் நேரத்தை முன்கூட்டியே தெரிவிப்பார்களா என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் வேண்டுகோளாக வைத்துள்ளனர். இது போன்ற நிலை தொடரும் பட்சத்தில் பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப் போவதாக மேலக்கால் பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.