மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட சத்யா நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்., தமிழ்நாடு தீயணைப்புத்துறையின் சென்னை – கிண்டி தீயணைப்பு நிலையத்தில் தற்போது பணியாற்றி வருகிறார்.,

கடந்த சில தினங்களுக்கு விடுமுறைக்காக சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு வந்திருந்த சுரேஷ்குமார், தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.,
உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன் வீடு கட்ட நல்லிவீரன்பட்டியைச் சேர்ந்த பிரவீன், சத்யா நகரைச் சேர்ந்த சுகப்பிரியா உள்ளிட்ட சிலரிடம் வட்டிக்கு பணம் வாங்கி இருந்தாகவும், அவர்கள் கொடுத்த தொந்தரவு காரணமாக உயிரை மாய்த்துக் கொள்வதாக மரண வாக்குமூலம் என வீடியோ வெளியிட்டுள்ளார்.,
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,

வட்டிக்கு பணம் கொடுத்தவர்களின் தொந்தரவு காரணமாக மன உளைச்சலில் தீயணைப்பு வீரர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.,




