• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

மயிலாடுதுறையில் கடையின் பூட்டை உடைத்து ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை..,

ByM.JEEVANANTHAM

Jul 25, 2026

மயிலாடுதுறை மாவட்டம் வள்ளலாகரம் ஊராட்சிக்கு உட்பட்ட சேந்தன்குடி பகுதியில் இரண்டு கடைகளில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

மயிலாடுதுறை சீர்காழி மெயின் ரோட்டில் மரகதம் என்பவருக்கு சொந்தமான கடையில் பூட்டை உடைத்து, பைனான்ஸ் கம்பெனியில் வாங்கி வைத்திருந்த ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர், இந்த கடைக்கு அருகிலேயே மற்றொரு பேட்டரி கடையிலும் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவசெந்தில் நேரில் விசாரணை மேற்கொண்டார், சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.