மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது நீண்ட வரிசையில் பெண்கள் காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர் தொடர்ந்து
பெண்கள் கூழ் ஊற்றி வழிபாடு செய்தனர்.

ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சோழவந்தான் பகுதி ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் மற்றும் சுற்றியுள்ள அம்மன் கோவில்களில் ஏராளமான பெண்கள் கூழ் ஊற்றி வழிபட்டனர். திருவேடகம் துர்க்கை அம்மன் கோவில் மேலக்கால் காளியம்மன் கோவில் முள்ளிப்பள்ளம் இளங்காளியம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் ஆடி இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பெண்கள் கூல் ஊற்றி பொதுமக்களுக்கு வழங்கினார்கள். குறிப்பாக சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலுக்கு 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள் வருகை தந்து ஜெனகை மாரியம்மனை வழிபட்டு சென்றனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டதுடன் பக்தர்களுக்கு கூல் ஊற்றி வழிபாடு செய்தனர். காலை முதல் இரவு வரை பல்லாயிரக்கணக்கான பெண்கள் ஜெனகை மாரியம்மன் கோவிலுக்கு வருகை தந்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. விசேஷ நாட்களில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க காவல்துறையினர் மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என பக்தர்கள் கேட்டுக் கொண்டனர். மேலும் ஜெனகை மாரியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் நிழற் குடை இல்லாததால் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பேருந்து நிறுத்தத்தில் வெயிலில் காத்திருந்தனர்.
பேருந்து நிறுத்தங்களில் நிழற் குடைகள் அமைக்க வேண்டும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் பக்தர்கள் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.




